ஆலையடிவேம்பு
13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா அவர்களை அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் குருமார்கள் மற்றும் நிர்வாக சபையினர் பாராட்டி கௌரவிப்பு…

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றினை சேர்ந்த மாணவி வைத்தியர் தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்திருந்தநிலையில்.
இன்றைய தினம் (03) திங்கட்கிழமை அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் குருமார்கள் மற்றும் நிர்வாக சபையினர் சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.