அக்கரைப்பற்று, விவேகானந்தா பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

அக்கரைப்பற்று, விவேகானந்தா பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (16) காலை 10.30 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் K.வேணி மற்றும் T.மேகலா அவர்களின் தலைமையிலும் மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மகளீர் அபிவிருத்தி நிலைய தலைவி J.காந்திமதி, கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர் S.சிறிதாசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் K.தெய்வேந்திரன் ஆகியவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து மற்றும் அவர்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு மகிழ்வுடன் வரவேற்கும் நிகழ்வும் மேலும் பொங்கல் நிகழ்வும் சிறப்பானதாக இடம்பெற்று இருந்தது.