அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேய தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை நிகழ்வின் 08ஆம் நாள் சந்தனக்காப்பு பூசை இன்று….

சிவபூமியாம் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சகல வளங்களும் பெற்று சிறப்புற்று ஓங்கும் அக்கரைப்பற்று வாச்சிக்குடா என்னும் திவ்ய பகுதியில் கோயில் கொண்டு தன்னை நாடிவரும் அடியார்களின் வினை போக்கி நல்லருள் புரியும் ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தில்
2024.12.30ஆந் திகதி நடைபெறவிருக்கும் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை நிகழ்வை முன்னிட்டு 2024.12.21 ஆந் திகதி தொடக்கம் 2024.12.30 ஆந் திகதி வரைக்கும் விஷேட பூஜை வழிபாடுகள் தினமும் காலையிலும், மாலையிலும் இடம்பெற்றுவருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் (28) 08ஆம் நாள் சந்தனக்காப்பு பூசை இடம்பெற்று வருகிறது.
ஆஞ்சநேய ஜெயந்தி தினமாகிய 2024.12.30 ஆந் திகதியன்று 108 அஷ்டோத்திர கலச சங்காபிஷேகமும் தேங்காய் துருவல் சர்க்கரை அபிஷேகமும் நடைபெறவுள்ளது.
சகல அடியார்களும் கலந்து கொண்டு எம்பெருமானின் அருளைப்பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறார்கள்.