அக்கரைப்பற்று மருது விளையாட்டு கழகத்தினரால் 400 மாணவர்களுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் இலவச கருத்தரங்கு….

அக்கரைப்பற்று மருது விளையாட்டு கழகத்தினரால் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் இலவச கருத்தரங்கு நேர்த்தியான ஒழுங்குபடுத்தலுடன் பங்குபற்றிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நேற்றய தினம் (08) ஞாயிற்றுக்கிழமை மருது விளையாட்டு கழகத்தின் நிர்வாக தலைவர் திலீபன் மற்றும் அணித்தலைவர் கிறிஸ்டி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த இலவச கருத்தரங்குக்கு மருது விளையாட்டு கழகத்தின் செயலாளர் வினோஜன், பொருளாளர் சிறிதரன் மற்றும் புலமைப் பரிசில் கருத்தரங்கு ஏற்பாட்டாளர் கமு/திகோ/கோளாவில் விநாயகர் வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் உமாகாந்தன் அவர்களின் வழிகாட்டலிலும், சமூக பற்றாளர்களின் நிதிப் பங்களிப்புடனும் மேலும் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் அண்ணளவாக 400 மாணவர்களுக்கு இந்த இலவச கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இக் கருத்தரங்கு ஆலையடிவேம்பு கோட்டத்தை பிரதிபலிக்கும் 11 பாடசாலைகள் 04 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேர்த்தியான திட்டமிடலுடன் தரம் – 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கற்பிக்கும் பிரசித்தி பெற்ற ஆசிரியர்களான வே. கிருஷாந்தன், சீ. பிரபாகரன், த. முரளீஸ்பரன் மற்றும் ப. விஜயேந்திரன் ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.