ஆலையடிவேம்புஇலங்கை
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அவசர பராமரிப்பு வேலை காரணமாக நாளை (26) நீர் விநியோகத் தடை!


அக்கரைப்பற்று பிரதேசத்தில் நாளை (26.07.2023) புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 10 மணித்தியாலங்கள் அவசர பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என்பதனை அறியத்தருகிறார்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினர்.
மக்கள் தங்களுக்கு தேவையான நீரை முன்கூட்டியே சேமித்துவைத்து சிக்கனமாக பாவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.