ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம் பகுதியில் விரைவில் புதிய சிறுவர் பூங்கா: சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்….

-ம.கிரிசாந்-
ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவனது அண்மையில் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றாற்போல் சிறுவர்கள் விரும்பும் வகையிலான புதிய விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
இதன் காரணமாக தற்போது பிரதேச சிறுவர்கள் மற்றும் சிறுவயது பாடசாலை மாணவர்கள் குறித்த சிறுவர் பூங்காவிற்கு சென்று மகிழ்வுடன் விளையாடிவருவதனை காணக்கூடியதாகவும் இருக்கின்றது.
இவ்வாறாக இருக்கின்ற நிலையில் உரிய தரப்பினருக்கு அதாவது ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் மக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பகுதியில் பிரதேச சிறுவர்களின் நலன்கருதி விரைவில் இன்னொரு புதிய சிறுவர் பூங்காவொன்று அமைக்கப்பட்ட இருப்பதாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
குறித்த சிறுவர் பூங்காவினை அமைப்பதற்கு ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்கள் அதற்கான நிதிகளை ஒதுக்கி ஒருசில அரச திணைக்களங்களில் அனுமதிகளை பெரும் தேவைப்பாடுகள் காணப்படுவதனால் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
சிறுவர்களுக்கு விளையாட்டு என்பது இன்றியமையாதது உளவியல் ரீதியான திருத்திப்படுத்தல் என்பது மிக முக்கியமானது. சிறுவர்களுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி மிகச்சிறந்தது என்பதுடன் முக்கியமானது என பல ஆய்வுகளின் முடிவுகளும் காணப்படுகின்றது.
இது இவ்வாறாக இருக்கின்ற நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சிறுவர்களுக்காக விரைவில் புதிய சிறுவர் பூங்காவொன்று கிடைக்க இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கின்றது. மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் பிரதேச மக்கள் சார்பாக தெரிவிக்க வேண்டியதாகவும் உள்ளது.