ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வும்: பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பும்.…

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று, திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு கடந்த (02) திங்கட்கிழமை அன்று அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் மகிழ்வடையும் வண்ணம் சிறுவர்களுக்கான கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான மதிய போசனம் என்பனவும் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த நிகழ்வுடன் இவ்வருடம் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல எதிர்பர்க்கும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.