அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் ஒருபதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் தற்போதைய நிலை: அடுத்த கட்டமாக மக்கள் செய்ய வேண்டியவை என்ன????

M.கிரிசாந்
ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஆனது பலரது அயராத முயச்சியால் உருவாக்கப்பட்டு சறுக்கு விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், பிள்ளைகளுக்கான சீசா என பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஓய்வுக்கான இருக்கைகள் அமைந்தவாறு மிகவும் நேர்த்தியான அழகான முறையில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொருத்தமான இடத்தியில் பிரதேச சிறுவர்களின் நலன்கருதி அமைக்கப்பட்டு இருக்கின்றபோதிலும்.
இவ் சிறுவர் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள், சிறுவர்கள் பாவனைக்கு செல்ல முடியாத மற்றும் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது, இதன் காரணமாக தூர இடங்களுக்கு பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை அழைத்துச்செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது என நாம் சுட்டிக்காட்டி இருந்தநிலையிலும், பொறுப்புவாய்ந்தவர்கள் இவற்றினை நிவர்த்தி செய்வது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்த நிலையிலும்.
தற்போது குறித்த சிறுவர் பூங்காவிற்கு முடிந்தவரை முறையான பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் குறித்த சிறுவர் பூங்காவினை பராமரிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உரிய பிரதிநிதிகளுக்கும் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கலை, பண்பாடு, கலாச்சாரம், விளையாட்டு என்பன முக்கியமானதாக காணப்படுகின்றது. சிறுவர்களுக்கு விளையாட்டு என்பது இன்றியமையாதது உளவியல் ரீதியான திருத்திப்படுத்தல் என்பது மிக முக்கியமானது. சிறுவர்களுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி மிகச்சிறந்தது என்பதுடன் முக்கியமானது என பல ஆய்வுகளின் முடிவுகளும் காணப்படுகின்றது.
இவ் விடயமானது சிறுவர்களின் கல்வியில் அதாவது விளையாட்டுடன் கூடிய கல்வியில் பாதிப்பு செலுத்தும் விடயமாக காணப்படுகின்ற நிலையில் குறித்த சிறுவர் பூங்கா மற்றும் அதன் பராமரிப்பு இன்றியமையாதது.
மேலும் தற்போது வருகின்ற தொடர்ச்சியான விடுமுறை நாட்களிலும் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கின்ற நிலையிலும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பணம் கொடுத்து தொலைதூரங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்வதனை முற்றிலும் தவிர்த்து.
எமது பிரதேசத்திலே காணப்படுகின்ற அக்கரைப்பற்று 7ம் பிரிவு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சறுக்கு விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், பிள்ளைகளுக்கான சீசா என பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஓய்வுக்கான இருக்கைகள் அமைந்தவாறு மிகவும் நேர்த்தியான அழகான முறையில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறுவர் பூங்காவிற்கு சென்று இலவசமான முறையில் பயன்படுத்தி பயன் அடைந்திட முடியும்.
இதன் மூலமாக எமது பிரதேச சிறுவர் பூங்காவினை தொடர்ந்தும் பேணி பாதுகாத்திடலாம் என்பதுடன் சிறுவர் பூங்காவினை அண்டியதாக காணப்படும் வர்த்தக நிலையங்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த கூடியதாகவும் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.