அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழக 42வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் றொபி 2025!

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்தின் 42வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் ரொபி – 2025 இன் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றய தினம் (30) அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச, உபதவிசாளர் ரகுபதி மற்றும் பிரதேச வட்டார உறுப்பினர் கதிகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இறுதிப்போட்டியிலே பொத்துவில் FREE LIONS மற்றும் அக்கரைப்பற்று LEE STAR ஆகிய கழகங்கள் பலப்பரீட்சை நடாத்தி இறுதியில் அக்கரைப்பற்று LEE STAR விளையாட்டு கழகத்தினர் சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர்.
குறித்த இறுதிநாள் நிகழ்வுகளில் பிரதேசத்தில் இருந்து தேசிய மட்டத்தில் தங்கம் பதக்கம் வென்ற ராம்கராத்தே சங்கத்தின் மற்றும் இராம கிருஸ்ணா கல்லூரியின் மாணவன் நவக்ஷன் அவர்களுக்கும் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.