ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் JOLLYBOYS CHAMPION’S TROPHY-2020 கிரிக்கெட் சுற்றுப்போட்டி போட்டி அட்டவணையுடன் இன்று ஆரம்பம்…..

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் சுற்றுப்போட்டி இவ்முறையும் JOLLYBOYS CHAMPION’S TROPHY -2020 இன்றைய தினம் (22) கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
இவ் போட்டித்தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது மேலும் இவ் போட்டித் தொடரானது 24 கழகங்களை உள்ளடக்கிய அணிக்கு 11 பேர் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட LEAGUE முறையிலான போட்டிகளாக இடம்பெற இருக்கின்றது.
.
போட்டிகள் அனைத்தும் தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் (DASA OVEL) இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெறும் அணிகளுக்கு மாபெரும் வெற்றிகிண்ணமும் பிரமாண்டமான பணப்பரிசுகளும் அத்தோடு ஒவ்வொரு போட்டி முடிவிலும் MAN OF THE MATCH பரிசுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.