அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் தின நிகழ்வு…..

அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் தின நிகழ்வுகளும் இந்தியாவில் இருந்து வருகைதந்த வளவாளர்களையும் வள்ளல்களையும் வரவேற்கும் நிகழ்வும் அறநெறி ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்றது.
நிகழ்வில் விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகராக இருந்து வழிநடத்திவரும் த.கயிலாயபிள்ளை அவர்களை முன்னிறுத்தி ஸ்தாபகர் தினமாக மார்ச் மாதம் 17ஆம் திகதியாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன். அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
மேலும் இந்தியாவில் இருந்து வருகை தந்த வளவாளர்கள், வள்ளல்கள் அவர்களுக்கான கௌரவிப்பும் அவர்களின் உரைகளும் இடம்பெற்றது. இதன் போது பிரதேச உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முன்வருவதாகவும் கூறியிருந்தார்கள்.
அடுத்து ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அறநெறி ஆசிரியர்கள் சுமார் நூறு பேருக்கு இந்து இளைஞர் மன்றத்தினரால் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த திருச்சி உதயா உணவுகள் பதப்படுத்தல் உற்பத்தி பயிற்சியாளர் எஸ்.பொன் செல்வி சரவணன் தொழில் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் எம்.ஞானசேகரன் சமூக சேவகர் எம்.பி.பழனிச்சாமி திருமதி கண்ணம்மாள் சண்முகம் சட்டத்தரணி மற்றும் ரோட்டறி கழகத்தின் செயலாளர் எப்.டபிளியு.பிறங்கிளின் விஜயகுமார் பணியகம் சார்ந்த தரச்சான்று உத்தியோகத்தர் சதீஸ்பாபு ஆகியவர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இவ் நிகழ்வின் இணைப்பாளராக ஆறுமுகம் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



