அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் கலைவிழா 2024….

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் கலைவிழா நிகழ்வு இன்று (12) காலை 10.00 மணியளவில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் திரு.த.கயிலாயபிள்ளை தலைமையிலும் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய இயக்குனர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற நிகழ்வில் .
அதிதிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் சிறார்களின் நடனங்கள், பேச்சுக்கள், மேடை நாடகங்கள் என பல கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் அதிதிகள் உரைகள் மாணவர்களுக்கான நினைவுச்சின்னம் மற்றும் பரிசு வழங்குதல் நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள ரத்நாயக்க, கவீந்திரன் கோடீஸ்வரன், ஆதம்பாவா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆகியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல அதிதிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றார்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.