ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள 376 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

வி.சுகிர்தகுமார்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிருபங்களுக்கமைய சமுர்த்தி வங்கியினால் வருமானம் குறைந்த சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு வங்கியினூடாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் கே.லவநாதனின் வழிகாட்டலில் வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.ரவிச்சந்திரன் மற்றும் யுகவதனி ஆகியோர் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.
இதன்பிரகாரம் இன்று மட்டும் 376 குடும்பங்களுக்கான 19 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.