அக்கரைப்பற்று கோளாவில் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பொது நூலக திறப்பு விழா இன்று….

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்துவரும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இன்று (07) நடைபெற்ற பொது நூலக திறப்பு விழா இடம்பெற்றது.
லண்டன் வோல்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதிப் பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்டு கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.கமலமோகனதாசன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் லண்டன் அகிலன் பவுண்டேசன் இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வானது அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்புடன்; மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவழிபாட்டுடன் ஆரம்பமானது. இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து நூல் நிலையத்தின் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தனர். தொடர்ந்து நூல் நிலையத்தை அதிதிகள் இணைந்து நாடாவை வெட்டி திறந்து வைத்து நூல்களை பார்வையிட்டனர்.
பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்பு நடனம் ஊடாக மாணவர்கள் வரவேற்றனர். இதன் பின்னராக கலந்து வரவேற்பு தலைமையுரை உள்ளிட்ட அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.
இறுதியாக பாடாசலை மாணவன் ஒருவருக்கும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தினரால் துவிச்சக்கரவண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.