ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தில் 2023ம் ஆண்டிற்கான பஞ்சாங்க கலண்டர் வெளியீடு…..

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் வருடத்துக்கான அதாவது 2023ம் ஆண்டிற்கான பஞ்சாங்க கலண்டரானது இன்று (08/11/2022) ஆலய நிர்வாகத்தினர் தலமையில் ஆலய வளாகத்தில் வெளியிடப்பட்டது.
குறித்த பஞ்சாங்க கலண்டரை பிரதேச அடியார்கள் அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் ஆலய திருப்பணிச்சபையினர் பிரதேச இல்லங்களை நாடிச்சென்று பஞ்சாங்க கலண்டரை வழங்கவும் தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.