அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆங்கில தின நிகழ்வு பொதுக்கல்வியை நவீனமயப்படுத்தும் செயத்திட்டம்…

-காந்தன்-
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆங்கில தின நிகழ்வு பொதுக்கல்வியை நவீனமயப்படுத்தும் செயத்திட்டம் (02/02/2022) நேற்று அதாவது புதன்கிழமை காலை 09.30 மணியளவில் பாடசாலையின் ஆங்கில மொழி மேம்பாட்டுக் குழு மற்றும் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் அதிபர் திரு.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறந்த முறையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வின் விசேட அதிதியாக திரு.S.சுரனுதான் D.D.E. ADMIN P.S.I Co-Ordinator, கௌரவ அதிதியாக செல்வி.K.கமலாதேவி A.D.E (English) மற்றும் சிறப்பு அதிதியாக திரு.P.தணிகாசலம் Secretary (S.D.E.C) என்பவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பம் ஆகிய நிகழ்வுகள் அதிதிகள் உரை, பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி சார்ந்த கலை நிகழ்வுகள், ஆங்கில மொழி மூலமாக உரையாடும் சிறப்பு சந்தை என பல நிகழ்வுகள் சிறப்பானதாக இடம்பெற்றது.
மேலும் பிரதி அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவ மாணவிகள் என பலரும் கலந்து குறித்த நிகழ்வு சிறந்த முறையில் இடம்பெற்றது.