ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா, நான்காம் நாள் இன்று…..

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் இன்று(25) நான்காம் நாளுக்கான பூசை நடைபெற்றது.
இதன் போது அப் பிரதேச மாணவர்களினால் நற்சிந்தனை மற்றும் கூட்டுப்பிராத்தனை நிகழ்வும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை எம்பெருமானின் வீதி உலாவினை தொடர்ந்து சனிக்கிழமை வைரவர் பூசையுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பேணியவாறு எம் பெருமானை தரிசித்து வருவது குறிப்பிடத்தக்கது.