இலங்கை
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட ஆராதனைகள் இடம்பெறுவதால், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதன்படி நேற்று இரவில் இருந்து வழிபாடுகள் இடம்பெறும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.
இந்த தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 500 மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.