அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினரால் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபையின் தவிசாளர் கெளரவிப்பு நிகழ்வு…..

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினரால் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் திருவாளர்.லயன்ஸ் ஆரியதாச தர்மதாச (முன்னாள் கிராம நிலதாரி- JP) மற்றும் ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபையின் தவிசாளர் திருவாளர் தேசமானி ஸ்ரீ மணிவண்ணன் JP (குருப்பிரதீபா அதிபர்) ஆகியவர்கள் இன்றைய தினம் (27) கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
கௌரவிக்கப்பட்ட இருவரும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபையின் தவிசாளராக அண்மையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு த.கயிலாயபிள்ளை ஐயா தலைமையில் இடம்பெற்றதுடன் அக்கரைப்பற்று, இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் மாலை 04.00 மணியளவில் இடம்பெற்றது.
முன்னிலை அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ், வைத்தியர் குணாளினி ஆகியவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் மேலும் நிகழ்வில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் தவிசாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.