அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு இத்தியடி வீதியின் நிலையே இது!

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு இத்தியடி வீதியின் நிலையே இது!
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதியாக காணப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்பே இவ் வீதி பாரியளவில் சேதமடைந்து மக்கள் அபாயத்துடன் இதன் ஊடக பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் வீதி முருகன் கோவில் பகுதியில் இருந்து சுமார் 500M தூரமும் ஆலையடிவேம்பு தீவுக்காலை பகுதியில் இருந்து சுமார் 500M தூரமும் Asphalt வீதி இடப்பட்டு நன்றாக காணப்படுகிறது. மீதமுள்ள பகுதி சம்பந்தப்பட்ட எவராலும் கண்டுகொள்ளப்படாது, கவனிக்கப்படாது இருந்து வருகிறது.
பிரதேச மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச சபையினரிடமும் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினரிடமும் குறித்த வீதி தொடர்பாக பரிந்துரைகளை மேற்கொண்டு இதனை சீர் செய்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பலமுறை தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
பரிந்துரைகளை மேற்கொண்டிருக்கின்றோம் விரைவில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றவாறு பதில்கள் அமைவதால் மக்கள்அடுத்த கட்ட நடவடிக்கைகளை இன்று வரை எடுக்காமல் இருப்பதாக தெரிவிக்கிறார்கள் .
குறைந்த பட்சமாக பிரதேசத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் குறித்த வீதியை அவதானித்துபராமரிப்பு வேலைகளையாவது மேற்கொள்ளாமல் இத்தனை வருடங்களாக இருக்கிறார்கள் என மக்கள் விசனம் அடைந்திருக்கிறார்கள்.
தற்போது பெய்துவரும் கனமழையினால் இவ் வீதியின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதும் அவதானிக்க கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



