அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்களால் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

-ம.கிரிசாந்-
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புகள் விவசாயிகளின் இன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வினைக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நாளை 2023.07.10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகே இருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை நடைபெறவுள்ளது.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதியில் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நெற்செய்கைக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரித்தும் தற்போது கிடைக்கும் விளைச்சல் குறைவானதாக உள்ளதாலும் விவசாயிகள் பெரும் நஸ்ட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும்.
அரசால் அறிவித்த மானியப் பணமும் பணமாக வழங்கப்படாமல் வவுச்சர் வழங்கப்பட்டு கண்துடைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதனை கண்டித்து நெல்லின் விலையை 100/=, 120/= ரூபாவாக நிர்ணயம் செய்து உடனடியாக அரச நெற் சந்தைப்படுத்தும் சபைமூலம் (pmw) விவசாயிகளின் முழுநெல்லையும் கொள்வனவு செய்யவும் தனியாரும் உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மானியப்பணத்தை பணமாக வழங்கவும் அல்லது விவசாயிகள் விரும்பும் உரத்தை பெறவும் நடவடிக்கை எடுக்க கோரி.
மாபெரும் கவனயீர்ப்பு பேரனி 2023.07.10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகே இருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து விவசாயிகளும் போடிமார்களும், விவசாய சங்கங்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் தவறாது கலந்து கொண்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தருமாறு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புகள் அழைக்கின்றார்கள்.