ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் சிரமதானம்…..

அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (04) வெள்ளிக்கிழமை சிரமதானம் மேற்கொண்டிருந்தார்கள்.
அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் (11/08/2023) அன்று ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் குறித்த சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.