ஆலையடிவேம்பு
Trending
அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி விழா! சோழன் இல்லம் முதலிடம்….

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்ட அக்கரைப்பற்று, திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (09) பி.ப 2.30 மணியளவில் அன்னை சாரதா கலவன் பாடசாலை வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி K. துளசி நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட பின்னர், தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒலிம்பிக் சுடரேற்றி மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டுகள் ஆரம்பமானது.
பாடசாலையின் இல்ல அணிகளான சேரன் இல்லம், சோழன் இல்லம், பாண்டியன் இல்லம் ஆகிய அணி மாணவர்களுக்கு இடையில் விளையாட்டு போட்டிகள் என்பனவும் இடம்பெற்று இருந்தது.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன், ஆசிரியர் வாண்மை விருத்தி முகாமையாளர் ந.சுதாகரன்,
அதிதிகளாக ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் பிரதி அதிபர் K.ஜெயந்தன், அன்னை சாரதா கலவன் பாடசாலையின் முன்னால் அதிபர் பி.தணிகாசலம் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துகொண்டிருந்த அதிதிகளால் முதலாம் இடம் பெற்ற சோழன் இல்லம், இரண்டாம் இடம்பெற்ற பாண்டியன் இல்லம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற சேரன் இல்லம் ஆகிய அணிகளுக்கு வெற்றி கிண்ணம் வழங்கி இருந்தார்கள்.

