ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நாளை முதல் சமுர்த்தி வங்கிகளினூடாக உலர் உணவு பொதிகள்….

வி.சுகிர்தகுமார்
நாட்டில் நிலவிவரும் கொரோனாவின் பாதிப்பில் மக்களின் நலன் கருதி அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின் உத்தரவிற்கமைய மக்களுக்கு இலகுவான முறையில் பொருட்களை நிர்ணய விலையில் பெற்றுக்கொடுக்கும் பணி சமுர்த்தி வங்கிகளினூடாக அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நாளை முதல் மேற்கொள்ளபடவுள்ளது.
சத்தோச நிலையங்களில் இருந்து சமுர்த்தி வங்கிகளினூடாக மொத்தமாக பெறப்படும் உலர் உணவு பொதிகள் குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் கண்காணிப்பில் சமுர்த்தி அடிப்படை அமைப்பின் உதவியோடு பிரிவு ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.