அக்கரைப்பற்றில் CEYLON GREEN LIFE PLANTATION தனியார் கம்பனியின் 85 வது கிளை!

சிலோன் கிரீன் லைஃப் பிளான்டேஷன் (CEYLON GREEN LIFE PLANTATION) நிறுவனத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயமானது அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் சாய் ராம் கட்டிடத்தின் மேல்தளத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்வு நிறுவனத்தின் அம்பாறை வலய முகாமையாளர் M.மதன் மற்றும் பிராந்திய முகாமையாளர் ஜி. கிசோர் மற்றும் கிளைமுகாமையாளர் ந. ரதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் நிறுவனத்தின் சார்பில் அம்பாறை பிராந்திய முகாமையாளர் து.துஷியந்தன், கல்முனை பிராந்திய முகாமையாளர் N.அநோஜன், அம்பாறை கிளை முகாமையாளர் P.G.கருனதாச. கல்முனை கிளை முகாமையாளர் ஜெயசந்திரன்மற்றும் M.M. ஷீரத் பாத்திமா, காரைதீவு கிளைமுகாமையாளர் ர.விக்னேஸ்வரன் மற்றும் விற்பனை நிர்வாகிகள் விற்பனை ஆலோசகர்கள் கலந்து கொண்டதுடன்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ், கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் பாடசாலையின் அதிபர் தேசமாணி ஸ்ரீ.மணிவண்ணன் மற்றும் சர்வமத தலைவர் காசிம் ஷாலித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிறுவனத்தில் பங்களிப்பு செய்யும் பங்களிப்பாளர்களின் நிதியை கொண்டு அப்பிள் கொய்யா மற்றும் ஏற்றுமதிப்பயிர்களை பிரதான பயிரினங்களாகவும் ஏனைய மரக்கறி வகைகளையும் பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கின்ற உற்பத்திகளை கொண்டு உள்ளூர் சந்தைகளுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் ஊடாக கிடைக்கும் இலாபத்தினை பகிர்ந்தளிக்கும் விதமான செயற்பாடுகளைக் கொண்டு எமது நாட்டிற்கு பசுமையையும், அபிவிருத்தியையும் கொடுப்பதே நிறுவனத்தின் நோக்கம் என்று அம்பாறை வலய முகாமையாளர் தெரிவித்தார்.
நிதி பங்களிப்பாளர்கள் எங்கள் CEYLON GREEN LIFE PLANTATION (PVT) LTD. நிறுவனத்தில் பங்களிப்பை செய்து பல்வேறு அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.



