இலங்கை
அக்கரைப்பற்றில் திருமண வீட்டிலிருந்து திரும்புகையில் பரிதாபமாக பலியான 08 வயது சிறுவன்!

திருக்கோவில் – அக்கரைப்பற்று பிரதான வீதி, தம்பட்டை பிரதேசத்தில், ஆட்டோ வீதியை விட்டுவிலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம், (04) காலை இடம்பெற்றதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் முதலாம் பிரிவு ஜே.பி. வீதியைச் சேர்ந்த 08 வயதுடைய சசிக்குமார் ஷிவசஞ்சீவன் என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
திருமண வீடு ஒன்றுக்குச் சென்று திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சிறுவனின் மாமா ஓட்டிச் சென்ற குறித்த ஓட்டோவில் சிறுவனின் தாயார், அம்மம்மா ஆகியோரும் பயணித்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தார்.

சடலம் நேற்று தம்பிலுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .



