இலங்கை
Trending

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

பொத்துவில் வீதியில் இன்று (28) அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்தாதல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் வண்டியின் சாரதி மற்றும் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் திருக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker