இலங்கை
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் “ENGLISH ONLY DAY” நிகழ்வு….

கல்வி அமைச்சின் சுற்று விருப்பத்தின்படி நேற்று புதன்கிழமை (23) அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் “ENGLISH ONLY DAY” நிகழ்வானது அதிபர் திரு.A.சுமன் தலைமையில் இடம்பெற்றது.
ஆங்கில மொழி இணைப்பாளர் திருமதி.நீரஜா அகிலன் அவர்களாலும்,பாடசாலை ENGLISH ONLY DAY குழுவினராலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் மாகாண மட்ட REATIVE WRITING போட்டியில் முதலாம் இடத்தினைப்பெற்ற செல்வி.கனகசபேசன் வைசாலி இவருக்கான நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் இவர் தேசிய ரீதியில் போட்டியில் பங்கு பற்றுவதுடன் 2016 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.