ஆலையடிவேம்பு
அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் நிவாரணப்பணிகள்

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் இணைந்துள்ளன.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றமும் நிவாரணப்பணிகளை ஆரம்பித்துள்ளது.
இதன் இரண்டாம் கட்டமாக அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளாவில்-03 மற்றும் அக்கரைப்பற்று-08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட 60 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மன்றத்தின் தலைவர் சி.கனகரெத்தினத் தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணிகளில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் மன்றத்தின் உறு ப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.









