விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரமோத்ய விக்ரமசிங்க, தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேற்று (16) தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், ஐந்து பேர் கொண்ட புதிய தேசிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதையும் அறிக்கை உறுதிப்படுத்தியது.

குழுவில் நியமிக்கப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் இந்திகா டி சரம், தரங்க பரணவிதான, வினோதன் ஜான் மற்றும் ரசாஞ்சலி டி அல்விஸ் ஆவர்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் எண் விளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 39-1 மற்றும் 2025  மே 21, திகதியிட்ட 2437/24 ஆம் எண் கொண்ட அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker