ஆலையடிவேம்பு
வெள்ளம் பாதித்த இடைத்தங்கல் முகாமிலுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு கோடீஸ்வரன் எம்.பி. உதவி!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இரு தினங்களுக்கு முன்னர் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
இன்று மீண்டும் அந்த மக்களிடம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களுக்குத்தேவையான உலர் உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் என்பவற்றை வழங்கிவைத்தார்.