வாழ்த்துக்கள்! 06 வயது எமது பிரதேச மாணவனின் திறமை!

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குகதாஸ் ருதீக் ஷன் தேசிய ரீதியில் நடைபெற்ற 15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் kata பிரிவில் 2ஆம் இடத்தை பெற்றார்!
15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 (15th Shotokan National Karate Championships 2025) கொழும்பு நகரிலுள்ள St Joseph’s Indoor Stadium அரங்கில் (14) நடைபெற்றது.
ருதீக் ஷன் Ram Katate Organisation அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் 6 year’s sub junior பிரிவில் 22 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு (ரன்னர்-அப்) 2ஆம் இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச ஷோட்டோகன் கராத்தே சாம்பியன்ஷிப்பில் தேர்வு செய்யப்பட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமைக்குரிய வெற்றி ஆகும். இவர் தேசிய மட்டத்தில் பதக்கம் வென்றது இரண்டாவது தடவையாகும். இது கோளாவில்-03 ற்கு மிகுந்த பெருமை அளிக்கிறது.
இவ் சாதனைக்கு இவரை பயிற்றுவித்த Sihan.K.Kendramoorthy sir அவர்களுக்கும் ஏனைய பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.



