இலங்கை
சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – டலஸ்!

சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிப்பது எமது நோக்கமல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ் – முஸ்லிம் மக்களை புறக்கணித்து தனி பௌத்த இராஜ்ஜியத்தை தோற்றுவிக்கும் விதத்தில் தேர்தல் சட்டத்தினை திருத்தியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.
எந்த இன மக்களையும் ஓரங்கட்டி செயற்பட வேண்டும் என்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார்.



