பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிபவர்களுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை…


பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிபவர்களுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பேரூந்துகளில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை நடத்துநர்கள் தொடர்ந்தும் ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான பேருந்துக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.
இருக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து பேருந்துகளையும் கைப்பற்றுமாறு பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இருக்கை அளவு வரை மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற விதிமுறை பெரும்பாலான பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிராமப்புறங்களில் இடம்பெறும் பேருந்து சேவைகளில் இந்த நடைமுறை மீறப்படுவதாக கூறினார்.
இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பேருந்துகளில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எனவே அரசாங்கம் முன்வைக்கும் விதிமுறைகளை பேருந்து உரிமையாளர்கள் ஏற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.



