ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள ரஷ்யாவின் நீருக்கடியில் உள்ள செயல்பாடுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்தின் “அட்லாண்டிக் பாஸ்டன்” (Atlantic Bastion) பாதுகாப்புத் திட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளது.
இந்த பல மில்லியன் பவுண்டு திட்டம், ஒற்றர் கப்பலான யாண்டார் (Yantar) போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டின் முக்கியமான நீருக்கடியில் உள்ள கேபிள்கள் மற்றும் குழாய்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பாதுகாப்புச் செயல்திட்டம், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட சுய-சார்புடைய வாகனங்கள் (Autonomous vehicles) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பைச் சார்ந்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்படை அதிகாரிகள் ஏற்கனவே SG-1 ஃபாதம் கிளைடர் மற்றும் எக்ஸ்காலிபர் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற புதிய தொழில்நுட்ப மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொழிற்துறையிடமிருந்து இந்த ஆண்டு £14 மில்லியன் முதலீட்டை ஈர்த்துள்ள இந்தத் திட்டத்திற்கு, ஐரோப்பாவிலிருந்து 26 நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன.



