இலங்கை
மழையுடன் கூடிய காலநிலை: திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கோறைக்களப்பு முகத்துவாரம் அகன்றுவிடும் செயற்பாடு முன்னெடுப்பு….

ஜே.கே.யதுர்ஷன்
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில்.
இன்றைய (25) தினம் நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
அந்த வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பல வீதிகள் மற்றும் குடியிருப்புக்கள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது இதனால் திருக்கோவில் பிரதேச சபையின் உதவியுடன் திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் உள்ள கோறைக்களப்பு முகத்துவாரம் இன்று பிற்பகல் அகன்று விடப்பட்டது.