இலங்கை
		
	
	
பொத்துவில் பிரதேச செயலக பிரிவில் நலிவுற்ற குடும்பங்களுக்கு இடர் கால உலர் உணவு நிவாரண உதவி வழங்கல் நிகழ்வு…


அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலக பிரிவில் சமூக சேவை செயற்பாட்டாளர்கள் திரு.இ.திரவியராஜ், திரு.இரா.பிராபாகரன் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய குண்டுமடு, இன்பெக்டர் ஏற்றம், செங்காமம் கிராமங்களில் உள்ள மிகவும் நலிவுற்ற 60 குடும்பங்களுக்கு தலா Rs.1750/- பெறுமதியான நிவாரண உதவிகள் இன்று (19) வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த இடர் கால உலர் உணவு நிவாரண உதவி அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் ஊடாக பணிப்பாளர் திரு.வே. வாமதேவன் அவர்களால் BON MARCHE – France இன் நிதி அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








 
				 
					


