இலங்கை
பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு எதிராக 800 தகவல்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர், பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராகக் கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 800 தகவல்களையே சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.
இந்தத் தகவலை, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியும் அரச சட்டவாதியுமான நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்