இலங்கை
குறைந்தபட்ச சம்பளமானது பாராளுமன்றில் நிர்ணயிக்கப்பட வேண்டும்


மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தும், பாராளுமன்றத்தின் ஊடாக அது ஏன் முன்னெடுக்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், குறைந்தபட்ச சம்பளமானது பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
´குறைந்தபட்ச வேதனங்கள்´ (இந்திய தொழிலாளர்கள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (04) நடைபெற்றது.



