இலங்கை
புதிதாக கார்பெட் மற்றும் கொங்கிறீட் மற்றும் பல அபிவிருத்தி திட்டங்கள் மட்டு மாநகர சபை மேயர் தலைமையில்….

ஜே.கே.யதுர்ஷன்
நிலையான அபிவிருத்தியின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஸ்தரிக்கப்பட்டு புதிதாக கார்பெட் மற்றும் கொங்கிறீட் மற்றும் பல அபிவிருத்தி திட்டங்கள் மட்டு மாநகர சபை மேயர் தலைமையில் இடப்பட்டுவருகின்றது.
இவ் அபிவிருத்தி திட்டமானது மட்டக்களப்பு மாநகர சபை மேயர் கெளரவ திரு.சரவணபவன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றது.
மேலும் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பல வீதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்தும் திட்டமும் மேயர் அவர்களின் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் அபிவிருத்தி திட்டங்கள் இவ் வருடத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திரு.சரவணபவன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.