இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் இன்று 04 கொவிட் தொற்று அடையாளம்…


ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்துவரும் கொவிட் தொற்று இன்று (21) நான்கு பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்தில் புதிய அலையில் இன்று வரை இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பொது மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணித்து செல்ல வேண்டும் எனவும் இதுவரை கொவிட்19 தடுப்பூசி பெற்று கொள்ளாதவர்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ளவேண்டும் என திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோககாந்தன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



