சிட்னியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கட்டுப்பாடுகள் அமுல்

சிட்னியில் இருந்து வரும் பிரயாணிகள் தமது நகருக்குள்நுழைவதை தடை செய்யும் நடவடிக்கைகளை அவுஸ்ரேலியாவின் பிற நகரங்கள் மற்றும் மாகாணங்கள் ஆரம்பித்துள்ளன.
அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலில் இருந்து தமது பிரேதேசங்களை தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கையாக குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி நியூஸ் சவுத் வேல்ஸ் மாகாணம் தமது பிராந்தியத்திற்குள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ள அதேவேளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ளவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறித்த தடையினை அடுத்து இன்று (திங்கட்கிழமை) சிட்னியில் இருந்து புறப்படும் பல விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சிட்னியில் ஏற்பட்டுள்ள புதிய கொத்தணி பரவலின்படி இதுவரை 83 நபர்கள் தொற்றுக்குள்ளாகியிருக்கும் அதேவேளை அவர்கள் அனைவரும் அந்நகரின் வடக்கு கடற்கரை பிராந்தியத்துடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நியூ சவுத் வேல்ஸில் நேற்றிலிருந்து 24 மணி நேரங்களுக்குள் பெறுக்கொள்ளப்பட்ட 38,000 பரிசோதனைகளின்படி 15 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கொரோனா தொற்றானது நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கடற்கரை பிராந்தியியங்களுக்கு அப்பால் பரவியிருக்க வாய்ப்புகள் இல்லையே தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.