ஆலையடிவேம்பு
Trending
பனங்காடு PK வாய்க்காலுக்கு அருகாமையில் இருக்கும் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை!

ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகி கிராமம் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் குறுக்கு வீதி அதாவது பனங்காடு PK வாய்க்காலுக்கு அருகாமையில் இருக்கும் வீதி, கண்ணகி கிராம மக்கள் இலகுவாக பயணங்கள் மேற்கொள்ள உதவியாக காணப்படுகின்ற வீதியாக இருந்து வருகிறது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் வீதியின் ஒரு பகுதி சேதம் அடைந்து பல நாட்களாக அவ்வாறே காணப்படுவதனால் பாடசாலை மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் போதும் மற்றும் பிரதேச மக்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது அபாய நிலை காணப்படுகிறது.
இதனை சீர் செய்து உடனடியாக புனரமைத்து தரவேண்டும் எனவும் மேலும் எதிர் கலங்களில் கொங்கிறீட் வீதியாகவும் மற்றும் கால்வாய் ஓரங்களில் தடுப்புச்சுவர் போன்றவற்றை அமைத்து தருமாறும் பிரதேச மக்கள் தயவாய் கேட்டுக்கொள்கின்றனர்.



