ஆலையடிவேம்பு
நோர்வே தமிழ் உறவுகளால் ஆலையடிவேம்பு 100 குடும்பங்களுக்கான 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணப்பணியை புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் இணைந்து முன்னெத்து வருகின்றனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு அகத்திக்குளம் பிரதேசத்தில் வாழம் 100 குடும்பங்களுக்கான 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கபட்டன.
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் ஏற்பாட்டில் சமூக நேயன் வே.வாமதேவனின் ஊடாக நோர்வே தமிழ் உறவுகள் வழங்கி வைத்த நிவாரணப் பொருட்களை அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினர் முன்னின்று வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் வே.வாமதேவன் உட்பட அம்மன் மகளின் பவுண்டேசன் உறுப்பினர்கள் அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.