இலங்கை
நிலாவெளியில் பொலிஸ் கான்ஸ்டபிள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

நிலாவெளியில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டார்.
வெளிநாடு செல்லவிருந்த பெண்ணொருவருக்கு நிலாவெளி பொலிஸ் நிலையத்தின் ஊடாக பொலிஸ் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி இந்த கான்ஸ்டபிள் இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் கைது செய்யப்பட்டார்.



