அம்பாறை மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கல்

இந்து ஸ்வயம் சேவ சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மண்டபத்தில் இரா.குணசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வே. ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய தர்மகத்தா ராஜமோகன், சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்தின் முன்னாள் தலைவர் வி. ரி.சகா தேவராஜா அவர்கள் அதன் பொருளாளர் குலேந்திரன், காரைதீவு ஆலயங்களின் பிரதிநிதிகள், இந்து ஸ்சுயம் சேவக சங்கத்தின் உறுப்பினர்கள்,
கல்முனை பிரதேச இந்து ஸ்வயம் சேவை சங்கத்தின் பொறுப்பாளர் தர்மராஜ் அவர்களும், அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ், காரைதீவு பிரதேச கலாசார உத்தியோகத்தர், மேலும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.





				
					


