திருக்கோவில் பிரதேச சமுர்த்தி பயன் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் காசோலைகள் வழங்கிவைப்பு..

ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் சமுர்த்தி திணைக்களத்தினால் சமுக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உயர் தர பாடசாலை மாணவர்களுக்கு அவர்களில் கல்வி கற்றலுக்கான நிதி உதவிப்பணமாக சிப்தொர புலமை பரிசில் வழங்கும் திட்டம்.
திருக்கோவில் பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் சமுர்த்தி பயன் பெறும் குடுங்களை சேர்ந்த 150 மாணவர்களுக்கு அவர்களின் உயர் தர கல்வி கற்றலுக்கான சிப்தொர புலமை பரிசில் திட்டத்தின் ரூபாய் 15000/-ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜா, மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் திரு.பரமானந்தம் ,திருக்கோவில் பிரதேச செயலக கணக்காளர் திரு.அரசரெத்தினம், சமுர்த்தி சமுகசூழல் பாதுகாப்பு உத்தியோத்தர் SP.சீலன், திருக்கோவில் 04 விநாயகபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.கவிதா தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் T.நிஷாந்தி மற்றும் சமுர்த்தி வங்கி உத்தியோத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.