இலங்கை

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரமதாச அவர்களினால் 27 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய பொருட்கள் வழங்கி வைப்பு….

ஜே.கே.யதுர்ஷன்

திருக்கோவில் ஆதார வைத்திய சாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச தமிழ் பிரதிநிதிகளின் அமைப்பாளர் வே.வினோகாந் அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தந்த எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரமதாச அவர்கள் 27 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய பொருட்கள் வைத்தியசாலை தலைமை அதிகாரியிடம் எதிர்கட்சி தலைவரினால் வழங்கீ வைப்பு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஓர் மூச்சு” திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் “சுவாசம்” எனும் திட்டத்தின் 49 ஆவது கட்டமாக, இருபத்தேழு இலட்சத்து தொண்ணூற்றாறாயிரம் ரூபா (ரூ.2,796,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் நேற்று (16) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் அம்பாறை திருக்கோவில் தள மருத்துவமனை வழங்கி வைக்கப்பட்டன.

அப்பொருட்கள் ஆவன
*ரூபா 143,000 பெறுமதியான ECG Recorder இயந்திரங்கள் இரண்டும்,

*ரூபா 375,000 பெறுமதியான Multipara Monitor இயந்திரங்கள் இரண்டும்,

*ரூபா 520,000 பெறுமதியான ECU Bed ஒன்றும்,

*ரூபா 1,240,000 பெறுமதியான CRAP இயந்திரம் ஒன்றுமே இவ்வாறு வழங்கி வைக்கப்படவுள்ளன.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

மேலும் இந் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சத்தியின் அமைப்பாளர்கள் மதகுருமார்கள் வைத்தியசாலை வைத்தியர் தாதியர் உத்தியோத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் இன் நிகழ்வில்கலந்து கொண்டனர்.

நாட்டின் ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும், அரசாங்கத்தை விடவும் அரசியலமைப்பு சக்தி வாய்ந்தது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஜனநாயக ரீதியில் போராடும் மக்களுக்கு எதிராக அச்சுறுத்தல், அடக்குமுறை மற்றும் மேலாண்மையை பிரயோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் போராடும் மக்கள் முன்னனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும்தெரிவிக்கையில்

அரசியலமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்தவிற்கும், ராஜபக்ச குடும்பத்திற்கு,அரசாங்கத்துக்கும் கூட அதிகாரம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாளிகையில் வசிக்கும் ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கே, மக்களின் போராட்டக் குரல் கேட்க வில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் போராட்டத்தின் அனைத்து கோரிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி உணர்ந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றப்பிரேரணை,நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்று 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்துவிட்டு 19 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கும் கூட தான் உறுதியாக இருப்பது அதனாலயே எனவும் அவர் தெரிவித்தார்

மேலும் இது வரை 48 கட்டங்களில் 1289 இலட்சம் (128,997,900) ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் இது வரை வழங்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker