இலங்கை

தரம் ஆறு புதிய பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு !

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற்கான புதிய கற்றல் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

புதிய கற்றல் தொகுதிகளின் இறுதி மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களைத் தயார்படுத்தும் வகையில், அவர்களுக்கு விளக்கமளிப்பதற்கான விசேட பயிற்சித் திட்டங்கள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஆறாம் தர மாணவர்களுக்காக இந்த புதிய கல்வி தொகுதிகளை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker