இலங்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் – கோட்டா, மஹிந்த உத்தரவு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாய் சம்பள உயர்வினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்தோடு இதற்கான நடவடிக்கைகளை விரைவில் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இந்த அறிவிப்பு தொடர்பாக நாளை உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இன்று காலை தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாயினை ஐந்து வருடங்களுக்குள் பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கிருந்ததாகவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.